| 245 |
: |
_ _ |a எசாலம் இராமநாத ஈஸ்வரர் கோயில் - |
| 246 |
: |
_ _ |a இராமநாத ஈஸ்வரர் |
| 520 |
: |
_ _ |a முதலாம் இராஜேந்திரன் சோழனின் கற்றளியான எசாலம் இராமநாதஈஸ்வரர் கோயிலில் 23க்கும் மேற்பட்ட செப்புத்திருமேனிகள் கண்டெடுக்கப்பட்டன. மேலும் 4 மணிகள், தூபக்கால் ஒன்று ஆகியவை எழுத்துப்பொறிப்புகளுடன் இக்கோயிலின் வளாகத்தில் புதையுண்டிருந்தன. மேலும் முதலாம் இராஜேந்திர சோழனால் வெளியிடப்பெற்ற எசாலம் செப்பேடுகளும் கண்டறியப்பட்டன. இவையாவும் பாதுகாப்புக் கருதி பல நூறு ஆண்டுகளுக்கு முன் மண்ணில் புதைக்கப்பட்டுள்ளன. புதைக்கப்பட்ட விதத்தை நோக்குங்கால் செப்புத் திருமேனிகளுக்கு எவ்வித தாக்கமும் ஏற்படாதவாறு ஆற்றுமணலைக் கொண்டுவந்து குழியில் கொட்டி அதன் நடுவே இந்த செப்புத் திருமேனிகளும், செப்பேடுகளும் புதைக்கப்பட்டிருந்தன. இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் கீழ் இக்கோயில் உள்ளது. |
| 653 |
: |
_ _ |a எசாலம், எசாலம் செப்பேடுகள், முதலாம் இராஜேந்திர சோழன், விக்கிரவாண்டி, இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை, இராமநாத ஈஸ்வரர், இடைக்காலச் சோழர் கலைப்பாணி, வீணாதர தட்சிணாமூர்த்தி, எசாலம் சிவன் கோயில், இராஜேந்திர சோழன் கற்றளி |
| 710 |
: |
_ _ |a தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகம் |
| 905 |
: |
_ _ |a கி.பி.11-ஆம் நூற்றாண்டு / முதலாம் இராஜேந்திர சோழன் |
| 909 |
: |
_ _ |a 1 |
| 910 |
: |
_ _ |a 1100 ஆண்டுகள் பழமையானது. இடைக்காலச் சோழர் கலை, கட்டடக்கலையைப் பிரதிபலிக்கின்றது. |
| 914 |
: |
_ _ |a 12.10948796 |
| 915 |
: |
_ _ |a 79.50166501 |
| 916 |
: |
_ _ |a இராமநாத ஈஸ்வரர் |
| 918 |
: |
_ _ |a திரிபுரசுந்தரி |
| 925 |
: |
_ _ |a காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம் |
| 927 |
: |
_ _ |a முதலாம் இராஜேந்திர சோழனால் கி.பி.1036-இல் வெளியிடப்பட்ட எசாலம் செப்பேடுகள் இக்கோயிலிருந்து எடுக்கப்பட்டன. இராஜேந்திரனது கல்வெட்டுகளும் இக்கோயிலில் உள்ளன. |
| 928 |
: |
_ _ |a இல்லை |
| 929 |
: |
_ _ |a தெற்குப்புறத்தில் தளம் கோட்டத்தில் வீணாதர தட்சிணாமூர்த்தி அமர்ந்த நிலையில் உள்ளார். மேற்குப்புறத்தில் தளம் கோட்டத்தில் திருமால் அமர்ந்த நிலையில் உள்ளார். வடக்கு தளம் கோட்டத்தில் நான்முகன் அமர்ந்த நிலையில் காணப்படுகின்றார். தேவகோட்டங்களில் மேற்கில் திருமாலும், வடக்கில் நான்முகனும் உள்ளனர். அர்த்தமண்டப தென்புறக் கோட்டத்தில் கணபதியும், வடபுறத்தில் விஷ்ணுதுர்க்கையும் அமைந்துள்ளனர். 23-க்கு அதிகமான செப்புத் திருமேனிகள் இக்கோயிலில் அகழ்ந்தெடுக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவை யாவும் இராஜேந்திர சோழன் காலத்தவை. அவற்றுள் பைரவர், கணபதி, துர்க்கை, சிவன், பார்வதி, தூபக்கால் ஆகியன குறிப்பிடத்தக்கன. |
| 932 |
: |
_ _ |a இக்கோயில் ஒரு தளத்தை உடைய கற்றளியாகும். வேசரபாணியில் அதாவது வட்டவடிவத்தில் கருவறை விமானத்தின் தலைப்பகுதி அமைந்துள்ளது. தாங்குதளம் முதல் கலசம் வரை கற்றளியாக அமைந்துள்ளது. தேவகோட்டங்களில் இறையுருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கருவறை, அர்த்தமண்டபம், முகமண்டபம், அம்மன் திருமுன் ஆகிய அமைப்புகளைப் பெற்று இக்கோயில் விளங்குகிறது. அர்த்தமண்டபத்தில் சோழர் கால தூண்கள் அழகு செய்கின்றன. |
| 933 |
: |
_ _ |a இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் கீழ் மரபுச் சின்னமாக விளங்குகிறது. |
| 934 |
: |
_ _ |a பிரம்மதேசம், எண்ணாயிரம் சிவன்கோயில்கள் |
| 935 |
: |
_ _ |a விழுப்புரத்திலிருந்து 20 கி.மீ. தொலைவில் எசாலம் ஊர் அமைந்துள்ளது. விக்கிரவாண்டியிலிருந்தும் செல்லலாம். |
| 936 |
: |
_ _ |a காலை 6.30-12.00 முதல் மாலை 4.00-8.30 வரை |
| 937 |
: |
_ _ |a விக்கிரவாண்டி |
| 938 |
: |
_ _ |a பேரணி, விக்கிரவாண்டி |
| 939 |
: |
_ _ |a திருச்சி, சென்னை - மீனம்பாக்கம் |
| 940 |
: |
_ _ |a விழுப்புரம் விடுதிகள் |
| 995 |
: |
_ _ |a TVA_TEM_000084 |
| barcode |
: |
TVA_TEM_000084 |
| book category |
: |
சைவம் |
| cover images TVA_TEM_000084/TVA_TEM_000084_இராமநாதீஸ்வரர்-கோயில்_விஷ்ணு-0008.jpg |
: |
|
| Primary File |
: |
TVA_TEM_000084/TVA_TEM_000084_இராமநாதீஸ்வரர்-கோயில்_விஷ்ணு-0007.jpg
TVA_TEM_000084/TVA_TEM_000084_இராமநாதீஸ்வரர்-கோயில்_முகப்பு-0001.jpg
TVA_TEM_000084/TVA_TEM_000084_இராமநாதீஸ்வரர்-கோயில்_கல்வெட்டு-0002.jpg
TVA_TEM_000084/TVA_TEM_000084_இராமநாதீஸ்வரர்-கோயில்_பலிபீடம்-0003.jpg
TVA_TEM_000084/TVA_TEM_000084_இராமநாதீஸ்வரர்-கோயில்_கோயில்-தோற்றம்-0004.jpg
TVA_TEM_000084/TVA_TEM_000084_இராமநாதீஸ்வரர்-கோயில்_கணபதி-0005.jpg
TVA_TEM_000084/TVA_TEM_000084_இராமநாதீஸ்வரர்-கோயில்_வீணாதரர்-0006.jpg
TVA_TEM_000084/TVA_TEM_000084_இராமநாதீஸ்வரர்-கோயில்_விஷ்ணு-0008.jpg
TVA_TEM_000084/TVA_TEM_000084_இராமநாதீஸ்வரர்-கோயில்_பிரம்மன்-0009.jpg
TVA_TEM_000084/TVA_TEM_000084_இராமநாதீஸ்வரர்-கோயில்_பிரம்மன்-0010.jpg
TVA_TEM_000084/TVA_TEM_000084_இராமநாதீஸ்வரர்-கோயில்_விஷ்ணுதுர்க்கை-0011.jpg
TVA_TEM_000084/TVA_TEM_000084_இராமநாதீஸ்வரர்-கோயில்_பூதகணம்-0012.jpg
TVA_TEM_000084/TVA_TEM_000084_இராமநாதீஸ்வரர்-கோயில்_தளம்-0013.jpg
TVA_TEM_000084/TVA_TEM_000084_இராமநாதீஸ்வரர்-கோயில்_நடராசர்-0014.jpg
TVA_TEM_000084/TVA_TEM_000084_இராமநாதீஸ்வரர்-கோயில்_தாங்குதளம்-0015.jpg
TVA_TEM_000084/TVA_TEM_000084_இராமநாதீஸ்வரர்-கோயில்_கோட்டம்-0016.jpg
TVA_TEM_000084/TVA_TEM_000084_இராமநாதீஸ்வரர்-கோயில்_நந்தி-0017.jpg
TVA_TEM_000084/TVA_TEM_000084_இராமநாதீஸ்வரர்-கோயில்_சிகரம்-0018.jpg
TVA_TEM_000084/TVA_TEM_000084_இராமநாதீஸ்வரர்-கோயில்_திரிபுரசுந்தரி-0019.jpg
TVA_TEM_000084/TVA_TEM_000084_இராமநாதீஸ்வரர்-கோயில்_அய்யனார்-0020.jpg
TVA_TEM_000084/TVA_TEM_000084_இராமநாதீஸ்வரர்-கோயில்_கொற்றவை-0021.jpg
TVA_TEM_000084/TVA_TEM_000084_இராமநாதீஸ்வரர்-கோயில்_தலைப்பலி-சிற்பம்-0022.jpg
TVA_TEM_000084/TVA_TEM_000084_இராமநாதீஸ்வரர்-கோயில்_தூண்-0023.jpg
TVA_TEM_000084/TVA_TEM_000084_இராமநாதீஸ்வரர்-கோயில்_சிவன்-பார்வதி-0024.jpg
TVA_TEM_000084/TVA_TEM_000084_இராமநாதீஸ்வரர்-கோயில்_சிவன்-0025.jpg
TVA_TEM_000084/TVA_TEM_000084_இராமநாதீஸ்வரர்-கோயில்_செப்புத்திருமேனி-0026.jpg
TVA_TEM_000084/TVA_TEM_000084_இராமநாதீஸ்வரர்-கோயில்_துர்க்கை-0027.jpg
TVA_TEM_000084/TVA_TEM_000084_இராமநாதீஸ்வரர்-கோயில்_பைரவர்-0028.jpg
|